• Jul 07 2026

விசில் சத்தம் காது கிழியுதா..!! விஜய் வீட்டில் செம்ம கொண்டாட்டம்.! வைரல் வீடியோ

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கிய நிலையில், பெரம்பூர் தொகுதியில் நடிகர் விஜய் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியதும், ஆரம்ப நிலவரங்களிலேயே விஜய் முன்னிலை பெற்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரது பனையூர் இல்லம் முன்பு அதிகாலை முதலே ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் குவிந்து உற்சாகமாகக் காத்திருந்தனர். வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பரபரப்பான சூழல் நிலவியது.


இந்த நிலையில், விஜய் தேர்தலில் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அவருடைய வீட்டில் உள்ளவர்கள் கொண்டாடி மகிழ்ந்த காட்சிகள் தற்போது இணையதள பக்கங்களில் வைரல் ஆகி வருகின்றன.

மேலும், விஜயின் தந்தை சந்திரசேகர் வீட்டிற்குள் வந்தபோது, குடும்பத்தினர் உற்சாகத்தில் ஓடி வந்து அவரை அணைத்துக் கொண்ட காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இந்த கொண்டாட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement