• Jul 07 2026

வேட்டையை தொடங்கிய விஜய்! 100 இடங்களில் முன்னிலை... - அதிர்ச்சியில் திமு‌க, அதிமுக!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த விஜய், தனது திரை வாழ்க்கையை தாண்டி அரசியலுக்கு வருவதாக அறிவித்து, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அவரது இந்த முடிவு ரசிகர்களை பெரிதும் ஆச்சரியப்படுத்தியது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. முக்கிய அரசியல் கட்சிகளுடன், விஜய்யின் கட்சி இந்த தேர்தலில் போட்டியிட்டதால், அனைவரின் கவனமும் அதன் மீது திரும்பியுள்ளது.

இந்நிலையில், காலை 9.45 மணி நிலவரப்படி வெளியாகியுள்ள தகவலின்படி, தமிழக வெற்றிக் கழகம் 100 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதாக கூறப்படுகிறது. இது விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

புதிய அரசியல் கட்சியாக இருந்தபோதிலும் இவ்வளவு பெரிய அளவில் முன்னிலை பெறுவது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது. எனினும், இறுதி முடிவுகள் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

Advertisement

Advertisement