• May 15 2026

சொன்னது சொன்னதுதான்.. மொட்டை அடிச்சாச்சு! கொடுத்த வாக்கை நிறைவேற்றிய பிரசாந்த் ரங்கசாமி

shali / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இந்த முறை பலருக்கும் எதிர்பாராத திருப்பங்களை அளித்துள்ளன. குறிப்பாக விஜய் தலைமையிலான த.வெ.க. கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்று அரசியல் வட்டாரத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் கிடைத்த வெற்றி, இந்த எழுச்சியை மேலும் வலுப்படுத்தியது.


இந்த வெற்றியைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட விஷயங்களில் ஒன்றாக சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி கூறிய சவால் அமைந்தது. விஜய் பெரும்பான்மையை நிரூபித்தால் தலையை மொட்டை அடிப்பேன் என்று அவர் முன்பே தெரிவித்திருந்தார். தேர்தல் முடிவுகள் வெளியானதும் ரசிகர்கள் இந்த வாக்குறுதியை நினைவுபடுத்தி அவரை கலாய்க்கத் தொடங்கினர்.

அதற்கு பதிலளித்த பிரசாந்த் ரங்கசாமி, “சத்தியமா சொன்னது சொன்னது தான்.. ஹேப்பியா பண்ணலாம்” என்று கூறி தனது வாக்குறுதியை நிறைவேற்றினார். அவர் உண்மையாகவே மொட்டை அடித்து அதன் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகியுள்ளது.

அவரது இந்த நடவடிக்கை சிலரால் பாராட்டப்பட்டாலும், சிலர் இதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறார்கள். எந்த விதமாக பார்த்தாலும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இது ஒரு வைரல் சம்பவமாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement