• May 05 2026

பதவியை ராஜினாமா செய்கிறாரா விஜய்.? உறுதியான தகவல் இதோ.. கூடிய விரைவில் இடைத்தேர்தல்

Aathira / 51 minutes ago

Advertisement

Listen News!

தமிழக தேர்தலில் வரலாறு படைத்த த.வெ.க. கட்சி 107 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.  இதில் போட்டியிட்டதிமுக 74, அதிமுக 54 இடங்களை மட்டுமே பெற்றுள்ளன.

த.வெ.க. தலைவர் விஜய், பெரம்பூரில் 44,583 ஓட்டு வித்தியாசத்திலும், திருச்சி கிழக்கில் 26,000 ஓட்டு வித்தியாசத்திலும் பிரமாண்ட வெற்றி பெற்றார். 

எனினும், பெரம்பூர் தொகுதி முழுதும் சுற்றிப் பார்க்காமல், வெறும் ஒரு நாள் மட்டுமே பிரசாரம் செய்து, விசில் கோலம் போட்டு சென்று இவ்வளவு பெரிய வெற்றியை பதிவு செய்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள த.வெ.க தலைவர் விஜய், தனது திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


சட்டப்படி ஒருவர் இரண்டு தொகுதிகளில் எம்எல்ஏவாக இருக்க முடியாது. எனவே ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்வது கட்டாயம். அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பது உறுதி.

வடசென்னை மக்களின் குரலாக சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்ற உணர்வில் பெரம்பூர் தொகுதியிலேயே தொடர விஜய் விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதனால் திருச்சி கிழக்கு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement