• May 05 2026

’happy birthday’ சொல்வதைப்போல.. சரித்திர வெற்றியை கொண்டாடுவோம்.! பார்த்தீபனின் குசும்பு

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

நொடிக்கு நொடி பரபரப்பை ஏற்படுத்திய தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகி உள்ளன. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிமிடத்திலிருந்தே தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்தது. நேரம் செல்ல செல்ல அந்த முன்னிலை இன்னும் வலுப்பட்டது.

இறுதியில் 107 தொகுதிகளில் வெற்றி பெற்று த.வெ.க. தனிபெரும் கட்சியாக வரலாற்றில் இடம்பிடித்தது. திரைப்படங்களில் கோடிகளை வசூலித்த விஜய், இப்போது வாக்குகளையும் கோடிகளில் வசூலித்துள்ளார்!

தேர்தலின் வெற்றி செய்தி வெளியானதும் தமிழகம் முழுவதும் வெடிகள் வெடித்தன, இனிப்புகள் வழங்கப்பட்டன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெருவில் இறங்கி கொண்டாடினர். ஒரு நடிகன் அரசியலில் இறங்கி இவ்வளவு பெரிய வெற்றி பெறுவது தமிழக வரலாற்றில் மறக்கமுடியாத தருணமாக மாறியுள்ளது.


தென்னிந்திய திரையுலகினரும் பல அரசியல் கட்சித் தலைவர்களும் விஜய்க்கு வாழ்த்துகளை குவித்தனர். நேற்று வரை திரையில் ரசித்தவர்கள் இன்று தலைவராக வாழ்த்துகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் பார்த்தீபன் விஜய்க்கு வாழ்த்து சொல்லி  பதிவிட்டுள்ளார். அதன்படி அவருடைய பதிவில், வாய் வழி காற்றை ஊதி, மெழுகுவர்த்தியின் சுடர் அனைத்து ’happy birthday’சொல்வதைப்போல,

 விசில் ஊதி சூரியனையே அனைத்து புதிய அரசு விடிகிறது! விஜயம் யார் வேண்டுமானாலும் செய்யலாம்… ஆனால்,ஜெயம் திரு விஜய் அவர்களால் மட்டுமே அசுர பலத்தோடு நிகழ்த்த முடியும் என்பதற்கு, தமிழக மக்கள் எண்ணிக்கையில் 107 இடங்கள் கொடுத்ததோடு, தங்களின்  இதயம் என்கிற இடத்தையே சிம்மாசனமாக்கி அதில்  முதல்வராக அமர, திரு விஜய் அவர்களுக்கு அமோக ஆதரவு அளித்திருக்கிறார்கள். இந்த சரித்திர வெற்றியைக் கண்டுள்ள real HERO -வை விசிலடித்து கொண்டாடி வாழ்த்துவோம்!

Advertisement

Advertisement