• May 05 2026

தமிழக அரசியலில் புதிய சரித்திரம் பிறக்குமா.. விஜய்யின் பதவியேற்பு விழா எப்போது தெரியுமா?

shali / 51 minutes ago

Advertisement

Listen News!

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் குழுக் கூட்டத்தில், விஜய் ஒருமனதாக தலைவராக தேர்வு செய்யப்பட்டதுடன், அவரை முதல்வராக ஆதரிப்பதற்கான உறுதிமொழி பத்திரத்தில் கட்சியின் எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டனர். இதன் மூலம் கட்சியின் உள்ளக ஒற்றுமை வெளிப்பட்டுள்ளது.


அடுத்த கட்டமாக, மே 7ஆம் தேதி விஜய் முதலமைச்சராக பதவியேற்கலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவருடன் அமைச்சர்களும் அதே நாளில் பதவியேற்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்க தேவையான முழுமையான பெரும்பான்மைக்கு இன்னும் 10 இடங்கள் குறைவாக உள்ளதால், மற்ற கட்சிகளின் ஆதரவை பெறுவது அவசியமாகியுள்ளது.

இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக முக்கிய பங்காற்றும் நிலையில் உள்ளது. 53 இடங்களை பெற்றுள்ள அதிமுக ஆதரவு அளித்தால், விஜய்க்கு எளிதில் ஆட்சி அமைக்க முடியும். ஆனால், தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கடும் விமர்சனங்கள் இந்த கூட்டணிக்கு தடையாக இருக்கலாம்.

மேலும், காங்கிரஸ், விசிகே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளுடனும் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. எனவே, வரும் நாட்களில் நடைபெறும் அரசியல் நகர்வுகள் தமிழக அரசியல் திசையை தீர்மானிக்க உள்ளன.


Advertisement

Advertisement