• May 06 2026

மொத்த குடும்பமும் சிதறிப் போகுதே.! தனியாக பிரிந்து சென்ற மனோஜ்! அதிரடி எபிசோட்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், வீட்டிற்கு வந்த முத்து  மீனாவிடம் அண்ணாமலை என்ன நடந்தது என கேட்கின்றார். அதற்கு முத்துவும் மீனாவும் அந்த பைனான்சியர் தங்களை சந்திக்க விடாமல் அலைய வைத்ததாக கூறுகின்றனர்.

மேலும் அவர்கள் ஜப்தி பண்ண முதல் நாமலே வீட்டிலிருந்து கிளம்பி வெளியேறுவோம் என்று முத்து சொல்லுகின்றார். அதன்படியே மீனா எல்லோரையும் என்னுடைய வீட்டிற்கு வாருங்கள் என்று அழைக்க, விஜயா மட்டும் தான் அங்கே வரமாட்டேன், எனக்கு அது தகுதியாக இருக்காது என்று கூறுகின்றார்.

இதைக் கேட்ட அண்ணாமலை என்னுடைய கையெழுத்தை போட மட்டும் உன்னுடைய தகுதி எங்கே போய்விட்டது என விலாசுகின்றார். மேலும் விஜயா எங்கே வேண்டும் என்றாலும் போகட்டும், நான் மீனாவின் வீட்டுக்கு வருகிறேன் என்று கூறுகின்றார் அண்ணாமலை.


இதனால் விஜயா ஸ்ருதியின் வீட்டுக்குச் செல்ல சம்மதிக்கின்றார். அந்த நேரத்தில் மனோஜ் நான் எங்கே போவது என்று கேட்க, நீதான் கடை வேண்டும் என்று பேராசை பட்டாய், இப்போது எல்லோரும் நடுத்தெருவுக்கு வந்திருக்கின்றோம், அதனால் நீ கடைக்குப் போய் தங்கு என்று முத்து கூறுகின்றார்.

அதன்படி எல்லோரும் அடுத்த நாள் வீட்டை விட்டு வெளியேறி கிளம்புகின்றனர். இதன்போது அண்ணாமலை வாசலிலிருந்து வீட்டைப் பார்த்து கண் கலங்குகின்றார். மீனாவும் கண் கலங்கி அழுகின்றார். 

ஆனாலும் இதெல்லாம் கூடிய சீக்கிரமே சரியாகிவிடும் என முத்து எல்லோருக்கும் ஆறுதல் சொல்லி அழைத்துச் செல்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement