• May 05 2026

பிரபல மலையாள நடிகர் திடீர் மரணம்.! சினிமா ரசிகர்களுக்கு ஈடுசெய்ய முடியாத துயரம்

Aathira / 55 minutes ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த பிரபல நடிகர் சந்தோஷ் கே. நாயர் (வயது 65), இன்று அதிகாலை சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே நடந்த இந்த சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை மனைவியுடன் காரில் பயணித்த சந்தோஷ் கே. நாயர், எதிர்பாராத விதமாக ஒரு வேன் மீது மோதியதில் கடுமையான விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அவரது மனைவி காயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


1982ஆம் ஆண்டு பி.ஜி. விஸ்வம்பரன் இயக்கிய 'இது நங்களுடே கதா' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சந்தோஷ் கேசவன் நாயர், வில்லன், கதாநாயகன், நகைச்சுவை நடிகர் என பல்வேறு வேடங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தவர். 

40-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் திரையுலகில் தனது திறமையை நிரூபித்த அவர், இப்படி திடீரென உலகை விட்டு பிரிந்திருப்பது திரையுலகிற்கே பேரிழப்பாகும். தற்போது பலரும் அவருக்கு தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement