உலக சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படும் கிறிஸ்டோஃபர் நோலன் தற்போது இயக்கியுள்ள புதிய திரைப்படம் “ஒடிசி” உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் வருகிற ஜூலை 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பழமையான கிரேக்கக் கவிஞர் ஹோமர் எழுதிய புகழ்பெற்ற காவியமான ஒடிசியை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. போருக்குப் பின் தனது நாட்டிற்கு திரும்ப முயலும் மன்னனின் நீண்ட பயணம், அவன் எதிர்கொள்ளும் சவால்கள், மன ஏக்கம் போன்ற உணர்வுகளை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.
இன்று வெளியான டிரெய்லர், பிரம்மாண்டமான காட்சிகளாலும், வியப்பூட்டும் ஒளிப்பதிவாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக கடல், போர்க்களம் மற்றும் தனிமை நிறைந்த தருணங்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த படம் முழுவதும் IMAX கேமராக்களில் படமாக்கப்பட்டுள்ளதால், திரையரங்க அனுபவம் மேலும் உயர்ந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், “ஒடிசி” தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ளது. நோலனின் தனித்துவமான கதை சொல்லும் பாணியுடன் இந்த காவியம் இணைந்திருப்பது, உலக சினிமா ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Listen News!