தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய தகவல்களின் படி நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 110 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த முன்னிலை அரசியல் வட்டாரங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில், நடிகை திரிஷா, விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்கு சென்றுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் இந்த முக்கிய தருணத்தில் அவரது இந்த வருகை பல்வேறு கருத்துக்களை எழுப்பியுள்ளது.
இது வெற்றியின் முன்னோட்டமாக வாழ்த்து தெரிவிக்கச் சென்றதா அல்லது நண்பராக ஆதரவு தெரிவிக்கச் சென்றதா என ரசிகர்கள் பல்வேறு கோணங்களில் விவாதித்து வருகின்றனர்.
மேலும், இன்று திரிஷாவின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது பிறந்த நாளில் கூட அவர் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சிலர் கருதுகின்றனர். திரையுலகில் நீண்ட காலமாக நட்பு கொண்டிருக்கும் விஜய் மற்றும் திரிஷா தொடர்பான இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
Listen News!