• May 15 2026

மம்மூட்டி - மோகன்லால் மேஜிக் திரையில் பலித்ததா? இத்தனை நாள் வசூல் நிலவரத்தைப் பாருங்க.!

shali / 1 week ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள ‘பேட்ரியாட்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பகத் பாசில், ரேவதி, நயன்தாரா, கிரேஸ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் சுமார் ரூ.29 கோடி வசூலித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக கேரளாவில் மட்டும் ரூ.8.5 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், மலையாள சினிமா வரலாற்றில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களில் இரண்டாவது இடத்தை ‘பேட்ரியாட்’ பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தை எம்புரான் படம் தக்க வைத்திருக்கிறது.

படத்திற்குக் கிடைத்துள்ள இந்த வெற்றியைத் தொடர்ந்து, மம்முட்டி தனது சமூக வலைதளத்தில் மோகன்லாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து “அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.

இந்நிலையில், ‘பேட்ரியாட்’ படம் வெளியான 4 நாட்களிலேயே உலகளவில் ரூ.68 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இப்படத்தின் வசூல் அதிகரித்து வருவதால், வரும் நாட்களில் புதிய சாதனைகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement