• May 15 2026

பிரம்மாண்டமாக உருவாகவுள்ள தளபதி விஜயின் பயோபிக்.! ஹீரோ யாரு தெரியுமா.?

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

பாலிவுட் நடிகர்களில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவரான அக்‌ஷய் குமார், இவர் 1991ஆம் ஆண்டு வெளியான Saugandh திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 

ஆரம்ப காலங்களில் ஆக்ஷன் ஹீரோவாக அறியப்பட்ட அவர், 'Khiladi' தொடர் படங்கள் மூலம் தனித்துவமான ரசிகர் வட்டத்தை உருவாக்கினார்.

இதைத் தொடர்ந்து பல மொழிகளிலும் நடித்த அவர், எந்திரன் 2.0 படத்திலும் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். 

ஒவ்வொரு ஆண்டும் பல படங்களில் நடித்துவரும் அக்‌ஷய் குமார், இந்திய திரையுலகில் மிகவும் பிஸியான நடிகர்களில் ஒருவராக உள்ளார். சமூக விழிப்புணர்வு கொண்ட கதைகளிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.


இந்தியாவின் உயரிய விருதான 'பத்மஸ்ரீ'யும் அக்‌ஷய் குமார் பெற்றுள்ளார். இன்று வரை தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்து வருகிறார்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தற்போது தமிழ்நாட்டின் முதல்வருமான விஜயின் வாழ்க்கை வரலாறு (பயோபிக்) படத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement