தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் அழிக்கமுடியாத தடம் பதித்த தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி, நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். நடிகர் ஜீவாவின் தந்தையான இவரது மறைவு சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானி குடும்பத்தைச் சேர்ந்த ஆர்.பி. சௌத்ரி, சினிமாவிற்கு வருவதற்கு முன் எஃகு ஏற்றுமதி மற்றும் நகை தொழில்களில் பணியாற்றினார். பின்னர் மலையாள சினிமாவில் 'சூப்பர்' நிறுவனம் தொடங்கி அடிபாபம், லயனம், கல்பனா ஹவுஸ் போன்ற படங்களை தயாரித்தார்.
தமிழில் குட் நைட் கொசுவலை தயாரிப்பாளர் ஆர். மோகனுடன் இணைந்து பணியாற்றிய இவர், பின்னர் தனியாக 'சூப்பர் குட் பிலிம்ஸ்' தொடங்கினார்.

புது வசந்தம், பூவே உனக்காக, சூரிய வம்சம், திருப்பாச்சி, ஜில்லா உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்தார். மகன் ஜீவாவை வைத்து 'தித்திக்குதே' படத்தையும் தயாரித்தார். இவர் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் கிட்டத்தட்ட 93 இயக்குநர்களை அறிமுகம் செய்துவைத்துள்ளார்.
இந்த நிலையில், தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி தனது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு உறவினர்களுடன் காரில் சென்றபோது எதிரே வந்த லாரி மீது மோதியத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார்.
எனினும் அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த உறவினர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தற்போது தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியையும் வேதனையையும் கொடுத்துள்ளது.
Listen News!