தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத அதிர்ச்சி நிகழ்வு நடந்துள்ளது. 59 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வந்த திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றப்புள்ளி வைத்து, த.வெ.க. வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
234 தொகுதிகளில் எடப்பாடி தொகுதியை மட்டும் தவிர்த்து 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு 107 இடங்களில் வெற்றி பெற்றது சாதாரண சாதனை அல்ல.
முதல் தேர்தலிலேயே தனிபெரும் கட்சியாக உயர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது த.வெ.க. தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடினர்
திமுகவின் தீவிர ஆதரவாளரான ஜூலி, தேர்தல் பிரச்சாரத்தின்போது சென்னை முழுவதும் சுழன்று பணியாற்றினார். விஜய்க்கு எதிராக மிகத் தீவிரமான பிரச்சாரங்களை மேற்கொண்டார்.

சமூக வலைதளங்களில் விஜய் மற்றும் த.வெ.க.வை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டார். ஆனால் மக்கள் தீர்ப்பு வேறுவிதமாக அமைந்தது. விஜய் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், நடிகையும், பிக் பாஸ் பிரபலமான ஜூலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில்,
''என்னப்பா ஜூலிய காணோன்னு 'காணவில்லை' போஸ்டர் எல்லாம் ஓட்டிக்கிட்டு இருக்கீங்க.. நான் எங்கேயும் போலப்பா இங்கதான் இருக்கறேன்.. அண்ட் உங்க வெற்றி வெற்றியை பார்த்திருக்கேன் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்..
ஒரு விஷயம் உங்களுக்கு புரியல.. அரசியல்ல நிரந்தர வெற்றியும் கிடையாது தோல்வியும் கிடையாது. இதை ரொம்ப ரொம்ப நல்லா தெரிஞ்சவங்க திமுகா காரவங்க. இந்த ஒரு விஷயத்துக்காக எல்லாம் துவண்டு ஆஃப் ஆகி போய் உட்காந்துருவோம் எல்லாம் நினைக்காதீங்க. .
நாங்க ஜெயிச்சு உட்கார்ந்தத விட ஆப்போசிஷன்ல உட்கார்ந்தது தான் ஜாஸ்தி.. இப்ப தானே நீங்க ஃபர்ஸ்ட் டைம் வந்திருக்கீங்க.. ஆப்போசிஷன்ல டிஎம் கே உட்காரும்போது அது எவ்வளோு டேஞ்சரஸ்ன்னு உங்களுக்கு இனிமதான் புரிய போகுது..
சண்டை செஞ்சே பழகுனா நாங்க அதனால எந்த சண்டையா இருந்தாலும் நாங்க ரெடி வாங்க களத்துல சந்திப்போம் இனிமதான் ஆட்டம் இன்னும் சூப்பரா சூடு பிடிக்க போகுது'' என தெரிவித்துள்ளார்
Listen News!