• May 04 2026

தமிழக வரலாற்றில் சரித்திரம் படைத்த விஜய்..! குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. முதல் முறையாக தேர்தலை எதிர்கொண்டிருந்த விஜய், பல இடங்களிலும் வலுவான முன்னிலை பெற்று இறுதியில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையிலேயே விஜய் முன்னிலை வகித்து வந்தார்.. இதனால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் மாநிலம் முழுவதும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

விஜயின் இந்த வெற்றி, அவரது அரசியல் பயணத்திற்கு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. திரைப்பட உலகில் பெரிய ரசிகர் வட்டத்தை கொண்டிருந்த அவர், அதையே அரசியலிலும் வாக்குகளாக மாற்றியுள்ளார் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.


இதேவேளை, அவரது கட்சி மாநில அரசியலில் புதிய சக்தியாக உருவெடுக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், இளைஞர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில், முதல் தேர்தலிலேயே விஜய் பெற்றுள்ள இந்த வெற்றி, தமிழக அரசியலில் புதிய மாற்றத்திற்கான தொடக்கமாக பார்க்கப்படுகிறது.

தற்போது முதல்வர் விஜய்க்கு பல பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் பல இடங்களிலும்  தளபதி ரசிகர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையும்  குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement