• May 17 2026

முத்து மீனாவை தெருத் தெருவாக அலையவிட்ட பைனான்சியர் – இறுதியில் வக்கீல் சொன்ன முடிவு

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், அண்ணாமலை வீட்டை ஜப்தி செய்யாமல் இருக்க பைனான்சியரை பார்த்து பேசுவதற்காக முத்தும் மீனாவும் புறப்படுகின்றனர். 

ஆனால் ஆரம்பத்தில் அவருடைய ஆஃபீஸில் முத்து மீனாவை காக்க வைத்த பைனான்சியர், அதன் பிறகு வேறு இடங்களுக்கு வரச் சொல்லி அலையவைக்கிறார்.

இறுதியில் பைனான்சியரின் நோக்கத்தை அறிந்த முத்து, மீனாவும் நேராக தங்களுடைய வக்கீலிடம் சென்று நடந்தவற்றை கூறுகின்றனர்.


மேலும் இதிலிருந்து மீள்வதற்கு, வீட்டை ஜப்தி செய்யாமல் இருக்க என்ன செய்யலாம் எனவும் கேட்கின்றனர். ஆனால் அடுத்த 10 நாட்களுக்கு நீதிமன்றம் விடுமுறை என்பதால், இது மிகவும் சிக்கலான வழக்கு என அவர் கையை விரித்து விடுகிறார்.

அத்துடன், இது எல்லாம் தெரிந்துதான் அவர்கள் முன்பே ஜப்தி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். எனவே ஜப்தி செய்தால் என்ன செய்வது என்று யோசிக்கவும் என கூறி அனுப்புகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement