• May 15 2026

வெளியாகும் முன்பே கசிந்த 'கிங்' படக்காட்சிகள் .. பேரதிர்ச்சியில் படக்குழு

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் 'கிங்' படம் வெளியாவதற்கு முன்பே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'வார்' மற்றும் 'பதான்' படங்களை இயக்கி புகழ்பெற்ற சித்தார்த் ஆனந்த் இயக்கும் இந்த படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்து படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இது இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் 6வது படம் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.  

மேலும் இந்த படத்தில் அனில் கபூர், ராணி முகர்ஜி, அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷாருக்கானின் மகள் சுஹானா கானும் இதில் நடிக்கிறார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது.


சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் படப்பிடிப்பு நடைபெற்றது. அங்கே ஷாருக்கான் — தீபிகா படுகோன் இடையேயான காதல், ரொமான்ஸ் மற்றும் நடன காட்சிகள் படமாக்கப்பட்டன. 

இந்த நிலையில், அந்த காட்சிகளில் 52 வினாடிகள் நேற்று இணையத்தில் கசிந்துள்ளன. எனினும் உடனடியாக அந்த காட்சிகள் நீக்கப்பட்டாலும் படக்குழுவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குறித்த கட்சிகளின் கசிவு தொடர்பாக படக்குழு சார்பில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது. வெளியாவதற்கு முன்பே இந்தபடமும் கசிவை சந்திப்பது திரையுலகில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

Advertisement

Advertisement