• May 04 2026

‘TIME TO LEAD' விஜய்க்கு முதல் ஆளா வாழ்த்து சொன்ன சிபி சக்ரவர்த்தி.!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

நடிகர் சிபி சத்யராஜ், ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் பெரிய வெற்றியை எதிர்பார்த்தபடி பெறாத அவர், கடந்த ஆண்டு வெளியான ‘10 ஹவர்ஸ்’ மூலம் நல்ல கவனம் பெற்றார்.

விஜயின் தீவிர ரசிகரான சிபி, அவர் அரசியலுக்கு வந்தது முதல் திறந்தவெளியில் ஆதரவு தெரிவித்து வருகிறார்.  சமீபத்தில் விஜய்க்கு அவர் எழுதிய உணர்ச்சி பூர்வமான கடிதம் பலரது கவனம் பெற்றது.

அந்த கடிதத்தில், “முதல் சந்திப்பில் ஒரு சாதாரண இளைஞனாக இருந்த நீங்கள், இன்று கோடிக்கணக்கான மக்களின் மனதை வென்ற சக்தியாக வளர்ந்துள்ளீர்கள். நீங்கள் இனி நடிக்க மாட்டீர்கள் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்தாலும், உங்கள் புதிய பயணத்தை நான் மதிக்கிறேன். ஒரு ரசிகனாகவும், நண்பனாகவும் எப்போதும் உங்களுடன் இருப்பேன்” என தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், சிபியின் தந்தை சத்யராஜ் மற்றும் சகோதரி திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஒரே குடும்பத்தில் அரசியல் கருத்து வேறுபாடு இருந்தாலும், தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்த சிபிக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் சிபி சக்கரவர்த்தி தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். 

அதன்படி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தின் ஸ்டோரில் விஜயின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில் ‘TIME TO LEAD' எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது சிபியின் இந்த பதிவு வைரல் ஆகி வருகிறது,




Advertisement

Advertisement