• Jan 19 2025

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ‘எதிர்நீச்சல்’ நடிகையா? மிகப்பெரிய சம்பளம் பேசப்பட்டதாக தகவல்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் ஒரு பக்கம் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களுக்கான ஆடிஷன் நடக்கவில்லை, எனவே தவறான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று சேனல் தரப்பில் இருந்து செய்தி வெளியிட்டாலும் இன்னொரு பக்கம் இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே டிடிஎஃப் வாசன் மற்றும் அவரது காதலி ஜோயா ஆகிய இருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ’எதிர்நீச்சல்’ சீரியலில் நடித்த நடிகையிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.



சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான ’எதிர்நீச்சல்’ சீரியல் முடிவடைந்த நிலையில் தற்போது அதில் நடித்த முக்கிய நடிகைகள் வேறு சீரியலில் இன்னும் கமிட்டாகாமல் உள்ளனர். அந்த வகையில் ’எதிர்நீச்சல்’ சீரியல் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை கனிகா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவருக்கு இதற்காக ஒரு பெரிய தொகை சம்பளம் பேசப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் பிக்பாஸ் 8 தொடங்கும் என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி எல்லாம் இன்னும் தொடங்கவில்லை என்றும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்றும் சேனல் தரப்பினர் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement