• Jan 19 2025

இப்போ இல்ல.. ஆனா எனக்கும் எக்ஸ்பெக்டேஷன் இருக்கு..! 'GOAT' மியூசிக் பத்தி யுவன் என்ன சொன்னாரு தெரியுமா?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வந்த லியோ திரைப்படம் உலக அளவில் கோடிக்கணக்கான வசூலை வாரி குவித்தது.

லியோ படத்தில் நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் போதே, வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார்.

வெங்கட் பிரபு இயக்கும் படத்திற்கு GOAT  என பெயர் வைக்கப்பட்டதோடு, அதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.


இந்தப் படத்தில் பிரபு தேவா, பிரசாந்த், மோகன் ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சௌதாரி, பிரேம்ஜி ஆகிய முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து கோட் படத்திற்கான படப்பிடிப்புகள் தாய்லாந்து, துருக்கி, உள்ளிட்ட நாடுகளில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.


இதையடுத்து தற்போது நடிகர் விஜய் அதிரடியாக அரசியலில் இறங்கிய போதும், அரசியலுக்கும் தனது சினிமாக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தனது கோட் படப்பிடிப்பை முடித்துவிட்டு, முழுமையாகவே சினிமா துறையில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக்  கொடுத்துள்ளது.

இந்த நிலையில், கோட் படம் பற்றி யுவன் சங்கர் ராஜா பேசிய விஷயம் சமூக வலைத்தளங்களில் டிரண்ட் ஆகியுள்ளது.

அதன்படி அவர் கூறுகையில், கோட் படத்தின் மியூசிக் பற்றி இப்போது நான் எதுவும் சொல்ல மாட்டேன். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சீக்கிரமே ஆரம்பமாகவுள்ளது. அதன் போது அனைத்து அப்டேட்களும் ரசிகர்களுக்கு கிடைக்கும். இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு ரொம்பவே எதிர்பார்ப்பு இருக்கும் என்று தெரியும். அதேபோலத்தான் எனக்கும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது... என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement