• Jan 19 2025

இந்த மூஞ்சியெல்லாம் நடிக்க வந்துருக்கு.. ஓவர் ஆக்டிங்.. கமெண்ட் பார்த்து கதறி அழுத விஜய் டிவி சீரியல் நடிகை..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவி சீரியல் நடிகை சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய நடிப்புக்கு கிடைத்த கமெண்ட்களை பார்த்து கதறி கதறி அழுதேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ’நீ நான் காதல்’ என்ற தொடரின் நாயகி அபி கேரக்டரில் நடிப்பவர் நடிகை வர்ஷினி சுரேஷ். கோவையைச் சேர்ந்த இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஐடியில் பணி செய்து கொண்டிருந்த நிலையில் தான் அவருடைய இன்ஸ்டாகிராமை பார்த்து சீரியலில் வாய்ப்பு  கிடைத்தது.

கல்லூரியில் படிக்கும் போது நடித்த அனுபவம் இருந்ததால் ஆடிசனுக்கு சென்று அதில் வெற்றியும் பெற்று முதல் சீரியலிலே அவருக்கு அபி என்ற நாயகி கேரக்டரும் கிடைத்தது. ஆரம்பத்தில் நடிப்பு என்பது ரொம்ப சவாலாக இருந்தது, ஆனால் இயக்குனர் சொன்னதை புரிந்து கொண்டு நான் நடித்தேன், உடன் நடிக்கிற நடிகர், நடிகைகள் எல்லோரும் சீனியர்கள் என்பதால் அவர்கள் கொடுத்த அறிவுரையும் எனக்கு உதவியது, எல்லோரும் என்னை தங்கள் குழந்தை மாதிரி பார்த்துக் கொண்டார்கள் என்று பேட்டி ஒன்றில் வர்ஷினி தெரிவித்துள்ளார்.
 
இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான ’ஹார்ட் பீட்’ என்ற வெப் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, ‘நீ நான் காதல்’ சீரியலின் ப்ரொடக்சன் டீம் தான் அந்த வெப் தொடரையும் தயாரித்ததால் அதில் எனக்கு சோனியா கேரக்டர் கிடைத்தது, அபி, சோனியா ஆகிய இரண்டு கேரக்டருமே டோட்டலாக வித்தியாசமானது , ஆனாலும் இரண்டையும் நான் வேறுபடுத்தி நடித்தேன்’ என்று வர்ஷினி கூறினார்.

ஆரம்பத்தில் தன்னுடைய நடிப்பை பார்த்து பலர் நெகட்டிவ் கமெண்ட்களை பதிவு செய்தார்கள், ’இந்த மூஞ்சி நல்லாவே இல்ல, ஆக்டிங் சரியில்ல, ஓவர் ஆக்டிங்’ என்று கமெண்ட் செய்தார்கள். ஆரம்பத்தில் இந்த கமெண்ட்களை பார்த்து கதறி கதறி அழுதிருக்கிறேன்’ என்று சொன்ன வர்ஷினி சுரேஷ் அதன் பிறகு தற்போது குறை சொன்னவர்களே பாராட்டும் போது தனக்கு பெருமையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement