நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணு வாடிவாசல் ஆடியோ ரைட்ஸை பலகோடிக்கும் விற்று விட்டதாக சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை-2 திரைபடத்தின் தொடர் வேலை காரணமாக வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருந்தது. ஆனால், தற்போது வாடிவாசல் படத்தை எடுக்க தயாராகி வருகிறார் வெற்றிமாறன். இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்.தாணு வாடிவாசல் திரைப்படம் குறித்து சமீபத்திய பேட்டில் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் " இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் தான் இசையமைக்கவுள்ளார். நான் ஆடியோ ரைட்ஸ் ரூ. 10 கோடி விற்பனை செய்துவிட்டேன். இதனை ஜிவி கிட்ட சொல்லும் போது அவருக்கு ரொம்ப சந்தோசம். இது பல நாட்களுக்கு முன் நடந்தது, அதுவே இப்போது விற்பனை செய்தால் பல மடங்கு அதிக தொகைக்கு விற்பனை ஆகும் என்று கூறியுள்ளார்.
மேலும் " வெற்றிமாறன் மாதிரி ஒரு இயக்குநர் கிடைக்கிறது வரம். சொல்,சுவை,பொருள் எல்லாம் ஒன்றாக இருக்கும். எத்தனையோ பெரிய நடிகர்கள் கேட்டு இருக்காங்க, தயாரிப்பாளர்கள் கேட்டு இருக்காங்க எல்லார் கிட்டையும் ஒரே பதில் தான் "வாடிவாசல் முடிச்சிட்டு வாறேன்" இதான் சொல்லுவாரு, படம் வேற மாதிரி வரும் காத்திருங்கள்" என்றும் தாணு கூறியுள்ளார்.
Listen News!