நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒருமாத சிறை தண்டனையை வழங்கப்பட்டுள்ளதாக பரபரப்பான செய்தி வலம் வருகிறது. பெண் பத்திரிக்கையாளர் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்திலே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. இது குறித்து பார்ப்போம்.
நடிகரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான எஸ்.வி.சேகர் கடந்த 2018ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சித்து தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் புகார் அளித்திருந்தார். இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. எஸ்.வி.சேகருக்கு ஒருமாத சிறை தண்டனையை உறுதிசெய்தத சென்னை உயர்நீதிமன்றம்15,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. நடிகர் எஸ்.வி. சேகருக்கு வழங்கிய ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து எஸ்.வி.சேகர் வழங்கிய மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!