• Jan 19 2025

கூலி படத்தின் அப்டேட்டுகள் பட்டாசா தெறிக்குதே..! கையில் மம்பட்டியுடன் ஸ்ருதிஹாசன்?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் - அனிருத் கூட்டணியில் வெளியான மாஸ்டர், விக்ரம், லியோ படங்களை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் கூலி. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

கூலி படத்தின் அறிவிப்பு வெளியான போதே பலருடைய மனதில் மகிழ்ச்சியை கொடுத்த விடயம் என்றால் அது ரஜினிகாந்த் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதுதான். அதேபோல லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் இந்த படம் யுனிவர்சில் இடம் பெறுமா என்ற கேள்வியும் காணப்படுகின்றது.

தற்போது கூலி படம் தொடர்பான அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றார்கள். நேற்று முன் தினம் இந்த படத்தில் நடித்துள்ள கேரக்டர்களை அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.


இந்த நிலையில், இன்றைய தினம் உலகநாயகனின் மகளும் பாடகியமான நடிகை ஸ்ருதிஹாசன் கூலி திரைப்படத்தில் பீர்த்தி என்ற கேரக்டரில் நடிக்கின்றார். தற்போது இந்த அறிவிப்பு  ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும் ஸ்ருதிஹாசன் கையில் மம்பட்டி வைத்துக்கொண்டு உள்ளார். இதனால் இந்த படம் நீ தானே எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து உள்ளது. அத்துடன் இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர் எனவும், இந்த படம் பான் இந்திய படமாக உருவாகி வருவதாகவும் பேச்சுகள் நடைபெறுகின்றன.


Advertisement

Advertisement