• Jun 21 2024

டாக்ஸிக் படத்திற்காக இணைந்த இரு துருவங்கள்.. லண்டனில் ஷூட்டிங் ஸ்டார்ட்

Aathira / 5 days ago

Advertisement

Listen News!

இந்திய அளவில் கே ஜி எஃப் படத்தின் மூலம் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றவர் தான் நடிகர் யாஷ். இந்த திரைப்படம் பட்டித் தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனது. வசூல் ரீதியாகவும்  மிகப்பெரிய சாதனையை படைத்திருந்தது.

இதை தொடர்ந்து நடிகர் யாசின் 18 வது படமான டாக்ஸிக் (Toxic Movie) படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.. இந்தப் படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகின்றார்.

இந்த படத்தில் நடிகை நயன்தாரா, கியாரா அத்வானி நடிப்பதாகவும்சமீப காலமாக தகவல்கள் பரவி வருகின்றன இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்து வருகின்றது.


இந்த நிலையில், தற்போது டாக்ஸிக் படம் தொடர்பில் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தில் நடிகர் யாஷ் ஸ்டைலிஷ் ஆன டானாக நடிக்கின்றாராம்.

மேலும் டாக்ஸிக் படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே இந்தியாவில் தொடங்கப்பட்டது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு லண்டனில் ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Advertisement

Advertisement