• Jan 19 2025

எல்லாம் பொய்யும் பித்தலாட்டமும் தானா? அமலாக்கத்துறை கிடுக்குப்பிடி விசாரணை

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் வெளியாகிய மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் இந்த ஆண்டு பிளாக் பாஸ்டர் படமாக மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்தது. வசூல் ரீதியாகவும் கிட்டத்தட்ட 200 கோடிகள் அளவில் எட்டியிருந்தது.

எனினும் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்கள் முதலீடு என்று சொல்லி 7 கோடி ரூபாய் பெற்று கொண்டதோடு, தன்னையும் ஏமாற்றிவிட்டதாக ஹமீது என்பவர் புகார் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ்  திரைப்படத்தை தயாரித்த பரவா பிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டு தான் மோசடி செய்துள்ளதாக கேரளா உயர் நீதிமன்றத்தில் போலீசார் வெளியிட்ட அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


மேலும் பரவா பிலிம்ஸ்  ஒரு ரூபாய் கூட  ஹமீதுக்கு வழங்கவில்லை பொய்யான தகவல்களை கூறி அவரிடம் ஒப்பந்தம் செய்து பணம் பெற்றுள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்காக முதலீடாக 7 கோடி பெற்று முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் இந்த படத்தின் தயாரிப்பாளரான நடிகர் ஷோபின் ஷாஹிர் இடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

கொச்சியில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்றுள்ளது. அடுத்த கட்ட விசாரணை அழைக்கும் போது ஆஜராக வேண்டும் என ஷோபனிடம் தெரிவித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பாகி உள்ளன.

Advertisement

Advertisement