• Jan 19 2025

ரவியிடம் ட்ரூத்தா? டேரா? கேட்ட ஸ்ருதி! வன்மம் நிறைந்த விஜயாவின் மூக்குடைத்த பாட்டி!

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. 

அதில், உறியடி போட்டி தொடங்க எல்லாரும் பங்கு பற்றுகின்றார்கள். ஆனால் மீனா மனோஜின் மண்டையில் அடித்து விடுகிறார். இந்த போட்டியில் முத்து தான் பானையை அடித்து வெற்றி பெறுகிறார். முத்துவை எல்லாரும் தூக்கி கொண்டாட, அவர் நம்ம தலைவியை தூக்குங்கடா என சொல்லி விஜயாவை தூக்கி கொண்டாடுகிறார்கள்.

இஇதை தொடர்ந்து,  டயர் ஓட்டும் போட்டி நடக்கிறது. அதிலும் எல்லாரும் தோல்வி அடைய, முத்துவும் மீனாவும் தான் வெற்றி பெறுகிறார்கள். மொத்த குடும்பமும் சந்தோசமாக நிற்க, ஊர் மக்கள் பார்த்து கண் வைக்கிறார்கள்.

இதை தொடர்ந்து, ஒவ்வொருத்தரும் முத்து ஜெயிக்க கூடாது, மீனா ஜெயிக்க கூடாதுன்னு பேசிட்டு இருந்ததையும் நான் கேட்டேன் அதனால தான் உங்களை இப்படி இரண்டு அணியாக பிரித்து விளையாட வச்சேன்‌ என பாட்டி சொல்ல எல்லாரும் ஷாக் அடைகிறார்கள்.

இதெல்லாம் முடிந்து எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது சுருதி நாம ஒரு கேம் விளையாடலாம் என்று ட்ரூத் ஆர் டேர் கேம் பற்றி சொல்கிறார். ரவி இந்த கேம் குறித்த விளக்க பிறகு சுருதி நானே விளையாட்டை தொடங்குகிறேன் என்று ரவியிடம் ட்ரூத்தா? டேரா? என கேட்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 



Advertisement

Advertisement