சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் KPY பாலா.
இவர் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமை மூலம் பேசப்பட்டவர்.
டிவி மட்டுமின்றி youtube சேனல் நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள், கோவில் திருவிழாக்கள் என அவர் வேறு பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும், விஜய் சேதுபதியின் ஜூங்கா, தும்பா, Friendship போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
அண்மையில், சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னிடம் இருந்த 2 லட்சம் ருபாய் பணத்தை எடுத்து அவர் 200 குடும்பங்களுக்கு பிரித்து கொடுத்தார். அதை பலரும் பாராட்டினார்கள்.
இந்த நிலையில், தன் சொந்த செலவில் மக்களுக்காக 5வது ஆம்புலன்ஸை வாங்கிக் கொடுத்து உதவியுள்ளார் பாலா.
அதன்படி, இந்த 5-வது ஆம்புலன்ஸ் தனக்கு மிகவும் ஸ்பெஷல் எனக் கூறிய பாலா, அதை வாணியம்பாடி அருகே உள்ள ஒரு மலைகிராம மக்களுக்கு வாங்கி கொடுத்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் சாலை வசதி இல்லாத கிராமத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை 7 கிமீ டோலியில் தூக்கி வந்து மருத்துவமனையில் அனுமதித்தது பற்றி செய்தித் தாளில் படித்துள்ளார் பாலா.
அதைப்பார்த்ததும் அந்த கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் வாங்கித் தர முடிவெடுத்த அவர் தற்போது அதை செய்தும் காட்டியுள்ளார்.
சாலை வசதியே இல்லாத அந்த கிராமத்துக்கு தன்னிடம் காசு இருந்திருந்தால் ரோடே போட்டு கொடுத்திருப்பேன், ஆனால் அந்த அளவுக்கு பணமில்லாததால் ஆம்புலன்ஸ் மட்டும் வாங்கி கொடுத்துள்ளேன்.
இது அக்கிராம மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன் என பாலா கூறியுள்ளார். அவரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
Listen News!