• Jan 19 2025

மன்னிப்பதே புனிதம் என்பதை மீண்டும் நிரூபித்த திரிஷா... முடிவுக்கு வந்த சர்ச்சை பிரச்சனை... மன்சூர் அலிகானுக்கு மீண்டும் மன்னிப்பு... நடிகை திரிஷா பதில் கடிதம்

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் பிரபல நடிகை திரிஷா குறித்து  பேசிய சர்ச்சை கருத்துக்கள் கடந்த சில தினங்களாக பரபரப்பாகி வந்தது. இதனை அடுத்து மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று மன்சூர் அலிகான் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.


அதன் பின் மன்சூர் அலிகான், திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதற்கு திரிஷா, தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பதே புனிதம் என்று பதில் அளித்தார். இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சை வகையில் பேசிய விவகாரம் குறித்து திரிஷா தரப்பிடம் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.


இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் நடிகை திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகை திரிஷா எழுத்துமூல கடிதத்தில் மன்சூர் அலிகான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டு விட்டார் அதனால் அவர் மீது மேல்நடவடிக்கைள் எடுக்க வேண்டாம் என நடிகை திரிஷா போலீசாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 


ஒரு வழியாக ஓரிரு வாரங்களாக இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய மன்சூர் அலிகான் பேசிய வார்த்தைகளுக்கு அவரே மன்னிப்பு கேட்ட நிலையில் தவறு செய்வது மனித இயல்பு மன்னிப்பது இறைவன் குணம் என மீண்டும் தனது கடிதத்தின் மூலம் நடிகை திரிஷா வழங்கிய மன்னிப்பு இத்தோடு இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.  

Advertisement

Advertisement