• Jan 18 2025

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொகுப்பாளினி மாற்றம்... இனிமே இவங்கதான் தொகுப்பாளினி...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சின் பிரபல தொகுப்பாளினி  மாற்றபட்டுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


சினிமா பிரபலங்களுக்கு நிகராக சின்னத்திரை தொகுப்பாளருக்கும் ரசிகர்கள்பட்டாளம் உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்து வருவது தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா தொகுத்து வழங்கி வந்தார்கள்.


இருவரின் காம்போவிற்காகவே தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. ஆனால் விஜே பிரியங்காவிற்கு முன்பு அந்த நிகழ்ச்சியை விஜே பாவனா தொகுத்து வழங்கி வந்தார். அதன் பின்னரே பிரியங்கா தொகுத்தாளினியாக வருகை தந்தார். 


இந்நிலையில் 6 ஆண்டுகள் கழித்து விஜே பாவனா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது அந்த ப்ரோமோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏன் பிரியங்கா தொகுத்து வழங்கவில்லை , என்னாது என பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


 

Advertisement

Advertisement