• Jan 24 2025

22 ஆண்டுகள் நிறைவு... கேக் வெட்டி கொண்டாடிய த்ரிஷா

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யாவின் சூர்யா45 படப்பிடிப்புத்தளத்தில் நடிகை திர்ஷாவின் 22 ஆண்டு கால சினிமா நிறைவையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகிறது. இந்த வீடியோவை   தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் ஃபிக்சர்ஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.


சூர்யாவை வைத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. சூர்யாவும் த்ரிஷாவும் 'ஆறு' திரைப்படத்தில் நடித்திருந்தனர். 20 ஆண்டுகள் கழித்து இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்து நடிப்பது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும்.


இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வைத்து படக்குழுவினரால் திர்ஷாவுக்கு சப்ரைஸ்சாக கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். அந்த தருணத்தில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, நடிகர் சூர்யா ,தயாரிப்பாளர்கள் உட்பட படக்குழுவினர் இருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி சொல்லி மகிழ்ச்சியாக கேக் வெட்டி தனது 22 கால சினிமா நிறைவை கொண்டாடினார் திரிஷா. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement