• Dec 23 2024

திரைத்துறை நீதி போதகர்கள் எங்கே? உங்க சலங்கைகள் ட்ரங்க் பெட்டியிலா? கொந்தளித்த பிரபலம்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா சமீபத்தில் வழங்கிய பேட்டியில் வலைப்பேச்சு டீமில் உள்ள மூவரையும் குரங்குகள் என்று தரம் தாழ்த்தி பேசி இருந்தார். இந்த விடயம் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியிருந்தது. 

இந்த நிலையில், பெண்களுக்கு என்றால் ரவுண்டு கட்டி ஆடும் உங்கள் புரட்சி சலங்கைகள்.. ஆண்களைப் பற்றி கீழ்த்தரமாக பேசும்போது மட்டும் ட்ரங்க் பெட்டியில் சுருண்டு கிடப்பது ஏன்? என்று பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பி உள்ளார்.  

அதாவது சமீபத்தில் பேட்டி அளித்த நயன்தாரா, கெட்டதை செய்.. கெட்டதையே பேசு.. கெட்டதையே கேள் என அடுத்தவர்களைப் பற்றி விமர்சித்து வயிறு வளர்ப்பவர்கள் தான் வலைப்பேச்சு  குழுவில் உள்ளவர்கள் என்று வெளிப்படையாகவே அவர்களை சாடி இருந்தார்.   

மேலும் வலைப்பேச்சு குழுவில் வெளியிடப்படும் 50 வீடியோக்களில் 45 வீடியோக்கள் என்னை பற்றி மட்டுமே பேசி இருப்பார்கள். அதற்கு காரணம் என்னை பற்றி பேசினால் தான் வியூஸ் வரும். அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். என்னைப் பற்றி தப்பாக பேசி பணம் சம்பாதித்தாலும் அது எனக்கு சந்தோஷம்தான் என்று பேசியிருந்தார்.


இவ்வாறான நிலையிலே ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தள  பக்கத்தில், மூன்று நொடி கார்ப்ரேட் விவகாரத்தில் தனுஷை சாடிய நயன்தாரா மேடம் வலைப்பேச்சு குழுவினரை மூன்று குரங்குகள் என நையாண்டி செய்துள்ளார். அதிலும் ஆங்கிலத்தில் மங்கி என்றும் ஹிந்தியில் பந்தர் என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஒருவேளை வலைப்பேச்சில் இவரை இவ்வாறு குரங்குகளுடன் ஒப்பிட்டு பேசி இருந்தால் இந்த நேரம் எப்படி கொந்தளித்து இருப்பார். விமர்சனம் செய்வது தவறு இல்லை.. ஆனால் தரம் தாழக்கூடாது.. தனிநபர் தாக்குதல் வன்மம் கூடாது என நீதி பேசும் தனஞ்செழியன் போன்ற திரைத்துறை நீதி போதகர்கள் இப்போது எங்கே போனார்கள்?

பெண்களை இழிவாக பேசும் போது ரவுண்டு கட்டி ஆடும் உங்கள் புரட்சி சலங்கைகள் ஆண்களைப் பற்றி கீழ்த்தரமாக பேசும்போது மட்டும் ட்ரங்க் பெட்டியில் சுருண்டு கிடப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். தற்பொழுது  ப்ளூ சட்டை மாறன் பதிவிட்ட பதிவு வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement