• Jan 19 2025

லெஜண்ட் சரவணன் அடுத்த படத்தின் நாயகி த்ரிஷாவா? 3 நாயகிகள் என தகவல்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

லெஜண்ட் சரவணன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் த்ரிஷா உள்பட மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் அருள் சரவணன் என்பவர் நடித்தலெஜண்ட்’  என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் பிரம்மாண்டமாக பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் லெஜண்ட் சரவணன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் இந்த படத்தை துரை செந்தில்குமார் என்ற இயக்குனர் இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஏற்கனவே தனுஷ் நடித்தகொடிசிவகார்த்திகேயன் நடித்தஎதிர்நீச்சல்உட்பட சில படங்களை இயக்கியிருந்த துரை செந்தில் குமார் தற்போது சூரி நடித்து வரும்கருடன்என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில் சமீபத்தில் லெஜண்ட் சரவணன் ஒரு திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ஏப்ரல் மாதம் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறியிருந்தார். இதனை அடுத்து இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் லெஜண்ட் சரவணன் ஜோடியாக த்ரிஷா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவானகொடிதிரைப்படத்தில் த்ரிஷா நடித்துள்ளதை அடுத்து அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



மேலும் இந்த படத்தில் 3 நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் த்ரிஷாவை அடுத்து மேலும் இரண்டு நடிகைகள் பாலிவுட்டில் இருந்து களமிறங்க போவதாக ஒரு கூறப்படுகிறது. மொத்தத்தில் முதல் படம் போலவே இந்த படத்தையும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக்க லெஜெண்ட் சரவணன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement

Advertisement