நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி
வரும் ’கங்குவா’ என்ற படத்தில் நடித்துக்
கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு
முடிந்ததாகவும் தற்போது டப்பிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுதா கொங்காரா இயக்கத்தில்
சூர்யா நடிக்க இருக்கும் 'சூர்யா 43’ படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர்
வெளியானது என்பதும் இந்த படத்திற்கு ’புறநானூறு’
என்ற டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி 'சூர்யா 43’ படத்தின்
படப்பிடிப்பு மார்ச் முதல் வாரம் தொடங்க இருப்பதாகவும் இதற்கான லொகேஷன் தேடும் பணி முடிவடைந்து விட்டதாகவும்
தெரிகிறது.
'சூர்யா 43’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடைபெற இருப்பதாகவும் 20 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடந்தவுடன் திருச்சி மற்றும் சிதம்பரத்தில் அடுத்தடுத்த படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து ஹரியானா
மாநிலத்திற்கு படக்குழுவினர் செல்ல இருப்பதாகவும் அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பு
நடைபெற இருப்பதாகவும் தெரிகிறது.
சூர்யா ஜோடியாக நஸ்ரியா நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் துல்கர்
சல்மான் உள்பட பலர் நடிக்க உள்ளனர்.
ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க
உள்ளார் என்பதும் 2டி நிறுவனம் இந்த
படத்தை தயாரிக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!