• Jan 19 2025

வெங்கடேஷ் பட்-ஐ தொடர்ந்து தாமுவும் விலகல்.. இனி ‘குக் வித் கோமாளியை மறந்துவிட வேண்டியதுதான்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்குக் வித் கோமாளிநிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன்களும் சூப்பர் ஹிட் ஆகியது என்பது தெரிந்தது. இந்த நிலையில் 5வது சீசன் மார்ச் மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் இந்த நிகழ்ச்சியின் அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் 5வது சீசனின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் விஜய் டிவி தரப்பிலிருந்து கூறப்பட்டது.

இந்த நிலையில்குக் வித் கோமாளிநான்கு சீசன்களிலும் மிக அருமையாக நடுவர்களாக பணிபுரிந்தவர்கள் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு என்பதும் இவர்கள் நடுவர்களாக மட்டும் இன்றி காமெடியில் கலக்கினார்கள் என்பதும் மொத்தத்தில் இவர்களால் தான் இந்த நிகழ்ச்சி கலகலப்பாக சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
இந்த நிலையில் திடீரென வெங்கடேஷ் பட் தனது சமூக வலைத்தளத்தில்குக் வித் கோமாளிஐந்தாவது சீசனில் இருந்து தான் விலகி இருப்பதாகவும் அது தனக்கு மிகுந்த மனக்கஷ்டத்தை அளித்தாலும் விரைவில் உங்களை வேறு ஒரு பெரிய நிகழ்ச்சியில் சந்திக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.




இந்நிலையில் வெங்கடேஷ் பட் அவர்களை அடுத்து தாமு அவர்களும்குக் வித் கோமாளிநிகழ்ச்சியில் இருந்து விலகி இருப்பதாகவும் வெங்கடேஷ் பட் மற்றும் நானும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியை நடத்த போகிறோம் என்றும் அந்த நிகழ்ச்சியின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

குக் வித் கோமாளிநிகழ்ச்சிகளில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு நடுவர்களும் விலகியதை அடுத்து பார்வையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் இந்த அதிருப்தியை நீக்கும் வகையில்குக் வித் கோமாளிகுழுவினர் வேறு யாரை நடுவர்களாக தேர்வு செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



Advertisement

Advertisement