• Aug 12 2025

சினிமாவின் சக்கரவர்த்தி கமல்ஹாசன்...!சினிமா பயணத்தின் 66 ஆம் சகாப்தத்துக்கு மரியாதை!

Roshika / 2 hours ago

Advertisement

Listen News!

இந்திய திரைத்துறையின் மகத்தான கலைஞர்களில் ஒருவராகக் கருதப்படும் கமல்ஹாசன், இன்று (ஆகஸ்ட் 12) தனது சிறப்பான சினிமா பயணத்தின் 66 ஆம் ஆண்டை எட்டியுள்ளார். 1960 ஆம் ஆண்டு இதே நாளில் வெளிவந்த 'களத்தூர் கண்ணம்மா' திரைப்படத்தில் ஐந்து வயது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், அந்நிகழ்விலேயே தேசிய விருதை வென்று தனது சாதனைகளுக்கான  கதவைத் திறந்தார்.


அடுத்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி என பல்வேறு இந்திய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‘நாயகன்’, ‘மூன்றாம் பிறை’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘இந்தியன்’, ‘தேவராகன்’ போன்ற படங்கள் வெறும் வெற்றிப் படங்களாக அல்ல, இந்திய சினிமாவின் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுள்ளன.


நடிப்பிற்கு அப்பாற்பட்ட விதங்களில் இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், நடனக் கலைஞர், எழுத்தாளர் என பன்முகத் திறமையை நிரூபித்தவர் கமல். தனது படைப்புகளில் சமூக, அரசியல் கருத்துக்களைத் திறமையாக புனைவாக்கியவர் என்றும் குறிப்பிடப்பட வேண்டும்.

இவர் மூன்று முறைகள் சிறந்த நடிகருக்கான தேசிய விருது, சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது, 19 ஃபிலிம்ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பல அங்கீகாரங்களை பெற்றுள்ளார். சமீபத்தில், தாதாசாகேப் பால்கே விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement