மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், தினேஷ் விஜன் கொணரும் புதிய ரொமான்ஸ் திரைப்படம் ‘பரம் சுந்தரி’. இதில் நடிகை ஜான்வி கபூர் மற்றும் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘தஸ்வி’ படத்தின் இயக்குனர் துஷார் ஜலோட்டா இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் சித்தார்த் வடஇந்திய இளைஞராக பரம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க, ஜான்வி தென்னிந்திய பெண்ணான சுந்தரியாக காட்சியளிக்கிறார். இரண்டு கலாச்சாரங்களை சேர்ந்த இந்த ஜோடி காதலிக்கிறார்கள். ஆனால், குடும்பங்களிடையேயும், கலாச்சார வேறுபாடுகளாலும் பிரச்சனைகள் உருவாகின்றன.
சிரிப்பு, காதல், குடும்ப பிரச்சனை மற்றும் எதிர்பார்க்காத திருப்பங்கள் ஆகியவை படம் முழுவதும் இடம்பெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான டிரெய்லர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கலர் ஃபுல் ஃப்ரேம்கள், ஹ்யூமர் மற்றும் எமோஷனல் டச் ஆகியவை டிரெய்லரை மேலும் ஈர்க்குமாறு அமைத்துள்ளன.
‘பரம் சுந்தரி’ வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கலாச்சாரங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த காதல் கதை, குடும்பத்துடன் பார்ப்பதற்கான ஒருங்கிணைந்த பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.
Listen News!