• May 04 2025

"Tourist Family" தெனாலி 2 படத்திற்காக எழுதப்பட்டது..! உண்மையை கூறிய இயக்குநர்..

Mathumitha / 11 hours ago

Advertisement

Listen News!

அபிஷன் ஜிவிந் எனும் புது இயக்குநரின் இயக்கத்தில் மே முதலாம் தேதி வெளியாகிய "tourist family " திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகின்றது. இன்றுவரை 3 கோடி வரை வசூலித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .


மேலும் இந்த படத்தின் இயக்குநர் இசை வெளியீட்டு விழாவில் தனது நெருங்கிய நண்பி ஒருவருக்கு மேடையில் வைத்து propose பண்ணி இணையத்தில் வைரலாகினார். இந்த நிலையில் தற்போது நேர்காணல் ஒன்றில் "tourist family " படம் குறித்து பேசியுள்ளார். இது மட்டுமல்லாமல் கமல்காசன் குறித்தும் பேசியுள்ளார்.


குறித்த நேர்காணலில் அவர் "தெனாலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு கதை எழுத துவங்கினேன் அதை எழுதும் தருணத்தில் ஓர் வரியில் மையக்கருவை பெற்றேன் அதுவே Tourist Family தற்போது வரும் பல இயக்குனர்களின் கருத்தியலுக்கு கமல்ஹாசன் என்றோ விதை போட்டுள்ளார்." என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement