விஜய் நடிப்பில் h .வினோத் இயக்கிவரும் "ஜனநாயகன் " திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து ஜோடியாக பூஜா ஹெட்ஜ் நடித்து வருகின்றார். மேலும் இந்த படம் "பகவத் கேசரி " எனும் தெலுங்கு படத்தின் ரீமேக் படம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
எப்போதும் விஜயின் முதல் நாள் வசூல் முன்கூட்டியே அறியப்படும் ஆனால் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு சுதா கெங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் "பராசக்தி " படத்தினை அதே நாளில் வெளியிடுவதற்கு தி மு க கட்சியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.
இந்த இரண்டு படங்களும் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் என்பதால் வசூலில் எது சாதனை படைக்கும் என உறுதியாக கூற முடியவில்லை இருப்பினும் எதிர்பார்த்ததை விட விஜய் பட வசூல் பெரிதும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!