• Feb 22 2025

"இவன் ஒரு பாவாடை... இவனோட படத்தை அழிக்கணும்"நடிகர் ஆர்.ஜே பாலாஜியின் பரபரப்பு பேச்சு..!

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் நடைபெற்ற "சொர்க்கவாசல்"திரைப்பட விழாவில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, படத்துக்கு எதிராக எழுந்துவரும் விமர்சனங்களையும், அரசியல் கட்சிகளின் சமூக ஊடக அணிகளின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்தார்.


பாலாஜி பேசுகையில், “இவன் ஒரு பாவாடை... இவனோட படத்தை அழிக்கணும்னு சொல்றாங்க. ஆனா நான் வேட்டி தான கட்டி இருக்கேன். யாராலும் என்னைத் தகர்க்க முடியாது!” என தனது மனநிலை தெளிவுபடுத்தினார்.


அவர் மேலும், “சினிமா ஒரு கலை. அதில் அரசியல் கட்சிகளின் IT Wing தலையிட வேண்டிய அவசியமே இல்லை. உங்களுக்காக உங்களோட வங்கி கணக்கில் பணம் வரலாம். ஆனால் அது உங்கள் அரசியலில் மாத்திரம் இருக்க வேண்டும் . சினிமா துறையைத் தகர்க்க முயற்சிக்காதீர்கள். உங்க அரசியலை சரியாக சென்று பாருங்கள்,” என்றார்.இந்நிகழ்வு சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி, பாலாஜியின் பதில்கள் ரசிகர்களிடையே பெரும் ஆதரவையும் சில சர்ச்சைகளையும் எழுப்பி வருகின்றது.

Advertisement

Advertisement