• Jan 19 2025

கமலுக்கு டார்ச் லைட்.. விஜய்க்கு தீப்பந்தமா..? தளபதியின் கடைசி படம் தேறுமா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

இளைய தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக கோட் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகின்றன. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து தற்போது விஜயின் அடுத்த படமான தளபதி 69 ஆவது படம் பற்றிய அறிவிப்பு இன்றைய தினம் வெளியானது. எச்.வினோத் இயக்க உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். மேலும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில், ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில்  எச். வினோத் கமலஹாசனை வைத்து இயக்க இருந்த திரைப்படம் தான் கமலின் 233வது திரைப்படம். தற்போது அந்தப் படத்தின் கதையில்தான் நடிகர் விஜய் நடிக்க உள்ளாரா என கேள்விகள்  எழுந்துள்ளன.


அதாவது கமலஹாசனின் 233 வது படத்தை எச். வினோத் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது . அதில் டார்ச் லைட் பிடித்து கொண்டிருந்த கமலுக்கு கையில் தீப்பந்தை கொடுத்திருந்தார். தற்போது அதேபோல விஜய் கையிலும் தீப்பந்தத்தை கொடுத்துள்ளார். இதன் காரணத்தினால் அது கமலஹாசனுக்கு சொன்ன கதை தானா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி  உள்ளார்கள்.

எச். வினோத் இயக்கிய படங்களிலேயே சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்கள் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. அஜித்தை வைத்து அவர் இயக்கிய படங்கள் ஹிட் அளிக்கவில்லை. தற்போது விஜயை வைத்து வெற்றி படத்தை கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement