• Jan 19 2025

எனக்கு சுயமரியாதை தான் முக்கியம்..! திடீரென குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய மணிமேகலை

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

90ஸ் கிட்ஸ் பேவரைட் தொகுப்பாளினியாக காணப்படுபவர் தான் விஜே மணிமேகலை. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பற்றி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். அத்துடன் மணிமேகலையும்  தனது கணவரும் இணைந்து சொந்தமாகவே youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார்கள். அதன் மூலம் கணிசமான வருமானம் கிடைக்கின்றது எனவும் கூறப்படுகிறது.

இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. அதன் மூலம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் மனதிலும் மிகவும் பிரபலமான விஜேவாக திகழ்ந்து வருகின்றார்.

இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேறி உள்ளார் மணிமேகலை. இது தொடர்பில் தனது இன்ஸ்டா பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றையும் பகிர்ந்து உள்ளார்.


அதில், ஆரம்பத்தில் இருந்து எனது 100% உழைப்பை போட்டு வருகிறேன், 2019ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அப்படிதான். ஆனால் எல்லாவற்றையும் விட சுயமரியாதை முக்கியம், இதனால் CWC 5ல் இருந்து வெளியேறுகிறேன்.

இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளினி ஆதிக்கம் செலுத்தினார். அவர் நிகழ்ச்சியின் சமையல்காரராக இருக்க வேண்டும், ஆனால் அவர் அதை அடிக்கடி மறந்துவிடுவார். வேண்டுமென்றே என்னை வேலையைச் செய்ய விடாமல் ஆங்கர் பகுதிகளில் நிறைய குறுக்கிடுகிறார். 

நமது உரிமைகளைக் கேட்பதும், கவலையை எழுப்புவதும் கூட இந்தப் பருவத்தில் குற்றமாகிவிடும். ஆனால் எனக்கு எது சரியானதோ, அதற்காக நான் எப்போதும் குரல் எழுப்புவேன்.   நான் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.

எப்போதும் எனது வேலையில் தொந்தரவு செய்துகொண்டு எனது வேலையை சரியாக செய்யவிடுவதில்லை. இதற்கு முன் இருந்து சீசன்களை முற்றிலும் தாண்டி இது ஆதிக்கம் செலுத்தும் சீசனாக உள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதன் தன்மையை இழந்துவிட்டது என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பேரதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளார்கள்.

Advertisement

Advertisement