• Sep 13 2024

'டைட்டில் வின்னர் சரவண விக்ரம்' இதென்னடா கப்புக்கு வந்த சோதன...! வைரலாகும் வீடியோக்கள்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வீடு தற்போது பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவில் சிக்கியுள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளரான சரவண விக்ரமை வைத்து செம்மையாக மீம்ஸ், ட்ரோல்கள் செய்து வருகின்றனர். தற்போது குறித்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றது.

பிக் பாஸ் வீட்டில் மிக்சர் போட்டியாளர்களாக வினுஷா, அக்‌ஷயா, பிராவோ குறித்து விமர்சனம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த வரிசையில் சரவண விக்ரம் இணைந்திருக்கிறார். 


ஆரம்பம் முதல் தற்போது வரையில் அவரது உண்மை முகம் தெரியவே இல்லை. கேப்டனாக அவர் இருந்த வாரம் கூட அவராக எந்த முடிவையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அவர் தொடர்பில் பல விமர்சனங்கள் குவிக்கப்பட்டது.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் ஒரு கட்டத்தில் தான் டைட்டில் வின் பண்ண வாய்ப்பு இருப்பதாக அவரே கூறிக்கொண்டார். இதை தொடர்ந்து அவர் தொடர்பான மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றது.


அத்துடன், முதல் சீசனில் எப்படி ரித்திகா அமைதியாக இருந்து டைட்டில் வின் பண்ணினாரோ அதே மாதிரி இந்த சீசனில் நிச்சயம் கப்பு எங்க சரவண விக்ரமிற்குத்தான் என இன்னொரு புறம் அவரது ரசிகர்கள் கமென்ட் இட்டுக் கொண்டிருக்கின்றனர். 

அதையே நெகட்டிவ் ஆகவும் சிலர் ட்ரோல் செய்கிறார்கள். எது எப்படியோ ஹசைலன்ட் ஆக இருந்து கப்பை வாங்கிட்டு போயிடலாம்' என அவர்கள் நினைப்பது கூட ஒருவகை யுக்தியாக இருக்கலாம் என்பதும் குறிபிடத்தக்கது.


 


Advertisement

Advertisement