• Nov 23 2025

1984ல் மைக்கேல் ஜாக்சன் அணிந்த பெப்சி விளம்பர ஜாக்கெட்! எத்தனை கோடிக்கு ஏலம் போனது தெரியுமா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

லண்டனில் நடந்த ஏலம் ஒன்றில் மைக்கேல் ஜாக்சனின் கருப்பு மற்றும் வெள்ளை நிற ஜாக்கெட்  ஒன்று 306,000 டாலர் (ரூ 2.5 கோடி)க்கு விற்கப்பட்டுள்ளது.

அதாவது, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு 1984 பெப்சி விளம்பரத்தில் அவர் அணிந்த ஆடையே அவ்வாறு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

குறித்த ஏலத்தில் ஜார்ஜ் மைக்கேலின் ஜாக்கெட் உட்பட  டேவிட் போவி மற்றும் எல்விஸ் போன்ற பிற இசை ஜாம்பவான்களுடன் இணைக்கப்பட்ட 200 க்கும் மேற்பட்ட நினைவுச் சின்னங்கள் ஏலத்தில் விடப்பட்டுள்ளன.


அந்த வகையில், ஜாக்சனின் 1984 ஆண்டு இடம்பெற்ற பெப்சி விளம்பரத்தில் அவர் அந்த ஜாக்கெட்டை அணிந்திருந்துள்ளார். குறித்த படப்பிடிப்பின் போது அவரது தலைமுடியில் தீப்பிடித்து, அவருக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதை தொடர்ந்து, மைக்கேல் ஜாக்சன் 'திஸ் இஸ் இட்' என்ற தலைப்பில் தனது இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு தயாராகிக்கொண்டிருந்தபோதே ​​ஜூன் 25, 2009 அன்று மாரடைப்பால் அவதிப்பட்டு உயிரிழந்துள்ளார்.

எனினும், அவரது மரணத்திற்கு  புரோபோபோல் மற்றும் பென்சோடியாசெபைன் என்ற போதைப்பொருள் பாவனையே காரணம் எனக் கூறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement