• Aug 16 2025

"ஆயிரத்தில் ஒருவனை" கொண்டாட மறந்தவர்கள் நிச்சயம் "தங்கலானை" கொண்டாடுவர் -மேடையில் ஜி.வி..!

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் நாளை வெளியாகவிருக்கிறது சியான் விக்ரம் மற்றும் பல நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம்.இந்நிலையில் படத்திற்கான விளம்பரங்களில் பெரிதும் உதவிய ஊடக நண்பர்கள் மற்றும் அனைத்துவகையிலும் தங்கலானை மக்களிடம் எடுத்துச் சென்ற அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக ஓர் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்று இன்று சென்னையில் நடக்கிறது.


இவ் பத்திரிகையாளர் சந்திப்பில் தங்களின் உழைப்பை நம்பி தங்கலானை மக்களிடம் எடுத்து வந்துள்ள படக்குழு பல்வேறு சுவாரசியமான விடையங்களை பகிர்ந்துள்ளனர்.இந்நிலையில் மேடையில் பேசிய படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் படத்தின் இசையை பற்றி குறிப்பிடுகையில் பல மறைந்த இசைகளை தேடி சேர்த்து கொண்டு வந்து ஓர் பரிசாகவே இப் படத்தை எடுத்து வந்துள்ளதாகவும் 


ஆயிரத்தில் ஒருவனை கொண்டாட மறந்துவிட்டோம் என கவலைப்படும் அனைவரும் நிச்சயம் தங்கலானை கொண்டாடியே தீருவார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.அனைவரும் தங்களின் 100 வீதத்திற்கும் மேலான உழைப்பை போட்டு தங்கலானை ரசிகர்களுக்கு எடுத்து வந்துள்ளதகவும் பேசியிருந்தார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

Advertisement

Advertisement