• Nov 22 2025

இந்தமுறை நீங்க போட்ட திட்டம் பலிக்காது கோபி.. எதிர்பாராத திருப்பத்தில் பாக்கியலட்சுமி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதன்படி அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

கோபி கூறியதற்கு இணங்க எழிலுக்கு வாய்ப்பு கொடுத்த ப்ரொடியூசரை சந்திக்க செல்கின்றார் கோபி. இதன் போது படத்திற்கான பூஜைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளையும் அதில் கலந்து கொள்ள உள்ளவர்களின் விபரத்தையும் கோபியிடம் ப்ரொடியூசர் கையளிக்கின்றார்.

இதை பார்த்த கோபி இந்த நிகழ்ச்சியில் பாக்கியா கலந்து கொள்ளக் கூடாது. ஆனால் ஈஸ்வரி கலந்து கொள்ள வேண்டும் என்று ப்ரொடியூசரிடம் சொல்லுகின்றார். 

d_i_a

மேலும் இதற்கு எழில் ஒத்துக் கொள்ள மாட்டான் ஆனாலும் ஒத்துக்கொள்ள வைக்க வேண்டும். பாக்கியா எழிலின் பட  பூஜைக்கான நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடாது என்று சொல்லிவிட்டு செல்லுகின்றார்.


அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே செழியனும் இனியாகும் என் பக்கம் வந்து விட்டார்கள் எழிலும் விரைவில் வந்து விடுவான் என்று கனவு காணுகிறார். 

எனவே பாக்கியாவை வீழ்த்த கோபி போடும் திட்டங்கள் வெற்றி பெறுமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். 

Advertisement

Advertisement