சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர் முன் நடிகர் அஜித் பற்றியும், அஜித்தே கடவுளே கோஷத்தினால் தனக்கு நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியதாவது "நானும் அஜித் ரசிகன் தான் எனக்கும் ஒரு நடிகராக அஜித்தை பிடிக்கும், சமீபத்தில் பாடசாலை நிகழ்ச்சி கலந்துகொண்டேன். அப்போது அங்கு இருந்த சில மாணவர்கள் 'கடவுளே அஜித்தே' என கோஷம் எழுப்பினர் எனக்கு விளங்கவில்லை ஒருநிமிடம் பேச்சை நிறுத்திவிட்டு, மாணவர்கள் என்ன சொல்கிறார்கள் என நிர்வாகிகளிடம் கேட்டேன், அவர்தான் "கடவுளே அஜித்தே" என்பது இப்போதைய ட்ரெண்ட் என கூறினார். பிறகு கோஷம் ஓய்ந்தபிறகு பேச்சை தொடங்கினேன் என்று கூறினார்.
மேலும் பேசிய இவர் அங்கு நடந்த சம்பவத்தை ஒவ்வொரு மீடியாவும் ஒவ்வொரு மாதிரி தலைப்புல போட்டாங்க, நான் அதிர்ச்சி அடைந்தேன் என்றும் போட்டாங்க அப்படி எல்லாம் ஒன்றுமே நடக்கவில்லை. எனக்கு விஜய், அஜித், ரஜனி, கமல் எல்லாரையுமே புடிக்கும். அதுக்காக இப்படி எல்லா இடத்திலும் குரல் எழுப்புவது தவறு அது அந்த அந்த இடத்துக்கு பொருந்துமா இருந்தால் சரி என்று கூறியுள்ளார் டிடிவி தினகரன்.
சமீப காலமாக அஜித்தே கடவுளே என்று ரசிகர்கள் வைப் பண்ணி வந்த நிலையில் அஜித் அதுகுறித்து அறிக்கை வெளியிட்டார். அதில் தன்னை ரசிகர்கள் கடவுள் என்று அழைக்க வேண்டாம் அஜித் என்றே அழையுங்கள் என்று கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
Listen News!