சன் டிவி தொலைக்காட்ச்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகிய சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா தற்போது தனது சோசியல் மீடியாவில் தான் கர்ப்பமாக இருக்கும் தருணத்தில் எடுத்த அழகிய புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
சன் டிவி சீரியல் டிஆர்பியில் டாப்பில் இருந்து வந்தது சுந்தரி சீரியல். இந்த சீரியலுக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். 1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்நிலையில் இந்த சீரியலில் ஹீரோயினாக இருந்த கேப்ரியல்லா தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சமீபத்தில் ரசிகர்களுக்கு அறிவித்து சந்தோஷத்தை கொடுத்தார்.
இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு கிளம்பிய கேப்ரியல்லா புதிய ஹேர் ஸ்டைலில் புடவை கட்டி மாஸான போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதனை அவர் இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள். மேலும் சோசியல் மீடியாவில் இருந்து சில காலம் ஓய்வு பெறப்போவதாக சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Listen News!