• Jun 24 2024

சந்தானம் படங்களில் கோட்டை விட காரணம் இது தான்.. சூரியின் ரூட் தான் வெற்றிக்கு காரணமா?

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த சந்தானம், சினிமாவில் காமெடி நடிகர் ஆக படு பிஸியாக இருந்து வந்தார். இவர் விவேக் மற்றும் வடிவேலுவை பின்னுக்கு தள்ளி  தனது காமெடி மூலம் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் திடீரென வந்த ஹீரோ ஆசையில் அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக களம் இறங்கினார். 

இந்த நிலையில், பல படங்களில் சந்தானம் தோல்வியை சந்திக்க காரணம் என்னவென்றும், கதையின் நாயகனாக உருவெடுத்த சூரி தொடர்ந்து வெற்றிகளை குவிக்க காரணம் என்பது குறித்தும் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், சந்தானத்தை சூரியால் ஒரு படத்தில் கூட வீழ்த்த முடியவில்லை. யோகி பாபு எல்லாம் பின்னாடி வந்து முன்னணி காமெடி நடிகராக மாறிய நிலையில், இதற்கு மேல் காமெடி பண்ண முடியாது என்பதை தெளிவாக சூரி  புரிந்துகொண்டு தனது ரூட்டை மாற்றி விட்டார்.

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தை தொடர்ந்து அமீர் உள்ளிட்ட பல்வேறு முன்னணி இயக்குனர்கள் சூரியை வைத்து படம் எடுத்து வெற்றி பெறலாம் என நம்புகிற அளவுக்கு விடுதலை, கருடன் போன்ற படங்களை கொடுத்துள்ளார் சூரி.


காமெடி தனக்கு கைகொடுக்கவில்லை என்றாலும் சினிமாவை விட்டு விலக முடியாது என்பதால் நடிக்க கற்றுக் கொண்டார் சூரி. அதுதான் அவருக்கு பலமாக உள்ளது. சசிகுமார், உன்னி முகுந்தன் பலர் நடித்திருந்தாலும் ரசிகர்களை தியேட்டருக்கு வரவைக்க வேண்டும் என்று சூரி தனது வேலையை சரியாக செய்துள்ளார். அதனால் தான் இந்த படம் 50 கோடி அளவுக்கு வசூலை நெருங்கியுள்ளது.

அதேபோல சந்தானம் அசைக்க முடியாத காமெடி நடிகராக  இருக்கின்றார். அவர் ஹீரோவானதில் எந்த தவறும் இல்லை. ஆனால் மக்கள் அவரிடம் காமெடிகளை தான் எதிர்பார்க்கின்றார்கள். அவரோ தன்னை அஜித் மற்றும் விஜய் ரேஞ்சுக்கு நினைத்து ஆக்சன் காட்சிகளில் முக்கியதத்துவம் செலுத்தி வருகின்றாரே தவிர காமெடியில் கோட்டை விடுவது தான் அவரது படங்கள் சோதப்ப காரணம்.

சூரியை விட சந்தானத்துக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. சந்தானம் தன்னுடைய ரூட்டை சற்றே மாற்றி கவனமாக காமெடி படங்களில் கையாண்டால் மிகப்பெரிய வசூல் வேட்டையை அவராலும் நடத்த முடியும் என்று பிஸ்மி கூறியுள்ளார்.

Advertisement

Advertisement