• Jan 19 2025

இதுதான் பிளாக் பாஸ்டர் கிப்ட்...! தனது ரசிகர்களுக்கு தனுஷ் பகிர்ந்த வாழ்த்து

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தற்போது நடிகர் என்பதையும் தாண்டி இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருபவர் தான்  நடிகர் தனுஷ்.

தனுஷின் ஐம்பதாவது படத்தை தானே இயக்கி தனது நடிப்பில் வெளியிட்டிருந்தார். இந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகின்றது.

ராயன் படத்தை பார்த்த பிரபலங்களும் தமது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றார்கள். கிட்டத்தட்ட மூன்று நாட்களில் மட்டும் இந்த திரைப்படம் 75 கோடிகளை வசூலித்து சாதனை படைத்துள்ளது. தனுஷின் கேரியரில் இந்த படம் தான் குறைந்த நாட்களில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தனுஷ் தற்போது தனது இரண்டாவது படமாக ராயன் படத்தை அவரே ஹீரோவாக நடித்து வெளியிட்டிருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.


இந்த நிலையில் தமிழ் சினிமாவில் நடிகரும் இயக்குனருமாக காணப்படும் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் ராயன் படத்தின் வெற்றி குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்

அதில் அவர் கூறுகையில், மக்கள் மற்றும் ப்ரீஸ் - மீடியா என்றும் என்னுடைய துணையாக இருக்கும் தூண்கள் எனது ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இது என்னுடைய சிறந்த பிளாக் பாஸ்டர் பிறந்தநாள் பரிசு.. ஓம் நமச்சிவாய.. என்று தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.



Advertisement

Advertisement